திமுக தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளரான தங்கதமிழ்செல்வன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேனி கே.ஆர்.ஆர் நகரில் உள்ள திமுக அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ரூ.2,000 கோடிக்கு கேரளாவில் சொத்து உள்ளதாக அம்மாநில பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளதை மேற்கோள் காட்டினார். தான் சொல்லும் குற்றச்சாட்டு பொய் என்றால் என் மீது ஓபிஎஸ் வழக்கு தொடரட்டும் என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில் தங்கதமிழ்செல்வனுக்கு சவால் விடும் விதமாக ஓ.பி.எஸ்-ன் இளைய மகன் ஜெயபிரதீப் தனது முகநூல் பக்கத்தில் அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார். அதில், ”கேரளாவில் கோடிக்கணக்கான சொத்துகளை சேர்த்து வைத்துள்ளோம் என பத்திரிகையாளர் சந்திப்பில் தங்கதமிழ்செல்வன் பொய் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். இதனை வன்மையாக கண்டிக்கிறேன். மக்களை ஏமாளிகள் என்று நினைத்துக்கொண்டு பொய் குற்றச்சாட்டுகளை கூறி வருவதை இத்தோடு அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.