தேனி: முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் புதியதாக நிர்வாகிகளை நியமித்து வருகிறார். அதன்படி புதிதாக நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களை, பெரியகுளம் கைலாசபட்டியில் உள்ள தனது பண்ணை வீட்டில் சந்தித்தார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து சால்வை, பூ மற்றும் பழக்கூடை கொடுத்து வாழ்த்து பெற்றனர். இதில் காரைக்குடி சட்டமன்றத் தொகுதி செயலாளர் பழனி, ஏழு கிலோ எடையிலான வெண்கல வேலை வழங்கி 'வெற்றிவேல் வீரவேல்' என முழக்கமிட்டார். பின்னர், புதிய நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்.