தேனி: திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் இன்று (ஜூலை. 28) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து இன்றைய தினம் அதிமுக சார்பில் எழுச்சியுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.