தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரக உள்ளாட்சித்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் நிறைவு - அதிமுக சார்பில் யாரும் போட்டியிடாத நிலை:இதுதான் காரணமா?! - local body election

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனு தாக்கல் நிறைவுபெற்ற நிலையில் அதிமுக சார்பில் யாரும் போட்டியிடாத நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கான காரணத்தை இச்செய்தியில் காண்போம்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனு தாக்கல் நிறைவு - அதிமுக சார்பில் யாரும் போட்டியிடாத நிலை
ஊரக உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனு தாக்கல் நிறைவு - அதிமுக சார்பில் யாரும் போட்டியிடாத நிலை

By

Published : Jun 28, 2022, 2:57 PM IST

தேனி: அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி என இருவரும் மாறி மாறி கடுமையான விமர்சனங்களை செய்து வருகின்றனர்.

இந்த சூழலில் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சிப் பதவிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய ஜூன் 27 மாலையுடன் கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. இதில் ஊரகப் பகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் சுயேச்சையாக மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும். அதேசமயத்தில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய இடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் கட்சி சார்பாகவும் போட்டியிட முடியும்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் தங்களின் கட்சி சார்பாக போட்டியிடும் உறுப்பினர்களை அங்கீகரித்து பார்ம் 6 கடிதம் வழங்கும். இந்தக் கடிதத்தை பெற்றவர்கள்தான் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் சார்பாக கட்சி சின்னத்துடன் போட்டியிட முடியும். கடந்த சில ஆண்டுகளாக அதிமுக சார்பாக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கட்சியின் அங்கீகார கடிதம் மற்றும் கட்சி சின்னத்தில் போட்டியிடுவதற்கான அனுமதி கடிதம் வழங்கி வந்தார்கள்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனு தாக்கல் நிறைவு - அதிமுக சார்பில் யாரும் போட்டியிடாத நிலை

ஆனால், தற்போது உட்கட்சி மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நகர்ப்புற இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடைசி நாளான நேற்று அதிமுகவின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அங்கீகார கடிதம் வழங்காததால் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

ஆளுங்கட்சியான திமுக தனது கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அங்கீகார கடிதம் கொடுத்துள்ள நிலையில், உட்கட்சி மோதலால் அதிமுக சார்பாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் யாரும் போட்டியிட முடியாத நிலை காணப்படுகிறது.

இதையும் படிங்க:அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் - ஓபிஎஸ்-ஈபிஎஸ் தனித்தனியாக ஆலோசனை

ABOUT THE AUTHOR

...view details