தேனி:இந்தியாவின் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள தலைநகரங்களிலும், அரசு அலுவலகங்களிலும் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக தேனி ஆயுதப்படை மைதானத்தில் தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி சஜீவனா பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்காக விழா மேடை அமைக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட அனைவருக்கும் இருக்கைகள் ஒதுக்கப்பட்டு இருந்தது. அதில் தேனி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களான சரவணகுமார் (பெரியகுளம்), கம்பம் ராமகிருஷ்ணன் (கம்பம்), மகாராஜன் (ஆண்டிபட்டி) ஆகியோருக்கு மட்டும் இருக்கைகள் ஒதுக்கப்பட்டு இருந்தது.
ஆனால், போடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வத்திற்கு இருக்கைகள் ஒதுக்கப்படவில்லை. கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு பெரியகுளம் எம்எல்ஏ சரவணகுமார் மட்டும் பங்கேற்ற நிலையில், ஆண்டிபட்டி மற்றும் கம்பம் சட்டமன்ற உறுப்பினர்கள் நிகழ்வில் பங்கேற்காத போதும் அவர்களுக்கு மேடையில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டு இருந்தது.