தேனி மாவட்டம் சின்னமனூர் வடக்கு ரத வீதியில், மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட யூசுப் அஸ்லாம் என்ற உதயகுமார் (31) பிரியாணி கடை நடத்தி வருகிறார். இந்து மதத்தைச் சேர்ந்த இவர் இஸ்லாமிய பெண் ஒருவரை காதலித்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக மதம் மாறி திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இவர் தனது மனைவியுடன் சின்னமனூர் பகுதியில் வசித்து வரும் நிலையில், அவரது வீட்டில் தேசிய புலனாய்வுத்துறை அலுவலர்கள் இன்று சோதனை மேற்கொண்டனர். இச்சோதனையில் தேசிய புலனாய்வு முகமை ஆய்வாளர் மைக்கேல் தலைமையிலான மூன்று பேர் கொண்ட அலுவலர்கள் ஈடுபட்டனர்.
சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான மதம் சார்ந்த கருத்துக்களைப் பதிவு செய்ததாகவும், பயங்கரவாதிகளோடு அவர்களுக்கு ஏதேனும் தொடர்பு இருக்கிறதா எனவும் அலுவலர்கள் சோதனை மேற்கொண்டதாகத் தெரிகிறது.
இதனை அறிந்த இஸ்லாமிய மக்கள் அப்பகுதியில் ஒன்றுகூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணிக்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.