தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீட் ஆள்மாறாட்டம்: சாட்சி இல்லாததால் இடைத்தரகர் விடுவிப்பு! - broker release

தேனி: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் தொடர்பாக விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட இடைத்தரகர் சாட்சி இல்லாததால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட இடைத்தரகர்

By

Published : Oct 3, 2019, 5:44 AM IST

நீட் தேர்வில் ஆள்மாறாட்ட செயலில் ஈடுபட்ட உதித் சூர்யா, ராகுல் ,பிரவீன் ஆகிய மூன்று மாணவர்களையும், அவர்களது தந்தைகளையும் சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட வாணியம்பாடியைச் சேர்ந்த இர்ஃபான் என்ற மாணவனும் நேற்று சேலத்தில் சரணடைந்தார். இவரது தந்தை முகமது சபியிடம் கடந்த இரண்டு நாட்களாக சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

இவர்களைத் தொடர்ந்து நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்துக்கு இடைத்தரகராக செயல்பட்ட திருப்பத்தூரைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்ற இடைத்தரகரை சிபிசிஐடியினர் நேற்று கைதுசெய்தனர். அரசு மருந்தகத்தில் பணிபுரிந்து கொண்டு இடைத்தரகராக செயல்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இவர், விசாரணைக்காக தேனி சிபிசிஐடி அலுவலகத்திற்கு நேற்று அழைத்து வரப்பட்டார்.

விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட இடைத்தரகர்

விசாரணையில் இடைத்தரகராக கோவிந்தராஜ் செயல்பட்டதற்கு எந்த சாட்சியும் இல்லை என்று கூறி தற்போது அவரை விடுவித்துள்ளதாக சிபிசிஐடி காவல் துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ‘காந்தியின் கனவு கலைந்துவிட்டது’ - சோனியா வேதனை

ABOUT THE AUTHOR

...view details