தேனி:தேனி, கோவை மாவட்டங்களில் நக்சலைட்டுகளுக்கு பயிற்சி நடந்துவருவதாகவும், தேர்தல் நேரத்தில் அவர்களால் தமிழ்நாட்டில் கலவரம் உண்டாக வாய்ப்புள்ளதாகவும் இந்து முன்னணித் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்து முன்னணி இயக்கத்தின் மாநில தலைவர் காடேஸ்ரா சுப்ரமணியன் இன்று தேனியில் செய்தியாளர்களிடம் சந்தித்துப் பேசிய போது இந்தக் கருத்தை தெரிவித்தார். மேலும், அந்த செய்தியாளர் சந்திப்பின்போது, கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்கும், டாஸ்மாக் கடைகள் செயல்படுவதற்கும் அனுமதியளித்துள்ள அரசு மார்கழி மாத பஜனை நடத்துவதற்கும், சொர்க்க வாசல் திறப்பதற்கும் அனுமதி மறுத்துள்ளதை வன்மையாக கண்டிப்பதாக கூறினார்.
இந்தியாவை துண்டு துண்டாக ஆக்க சீனா மிகப்பெரிய சதித்திட்டம் தீட்டிவருவதாக குறிப்பிட்ட அவர், சீனாவின் தூண்டுதலால்தான் டெல்லியில் பஞ்சாப் விவசாயிகள் போராடிவருவதாகவும், அங்கு பயங்கரவாதிகளின் ஊடுறுவல் நிகழந்துள்ளதாகவும் தெரிவித்தார்.