தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நக்சலைட் ஊடுருவலா? கேரள எல்லையில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள்! - Naxal infiltration in Theni

தேனி: கேரள மாநில எல்லைகளில் மணல் மூட்டைகளை அடுக்கிவைத்து துப்பாக்கி ஏந்தி தமிழ்நாடு காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

தமிழக காவல்துறையினர்
தமிழக காவல்துறையினர்

By

Published : Oct 4, 2020, 6:27 AM IST

தமிழ்நாடு-கேரள எல்லையில் அமைந்துள்ளது தேனி மாவட்டம். குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு ஆகிய மலைச்சாலைகளின் வழியாக கேரளாவின் இடுக்கி, பத்தினம்திட்டா, ஆலுவா, எர்ணாகுளம், கொச்சின் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஏராளமானோர் சென்றுவருகின்றனர். இதற்காக மாநில எல்லையில் அமைக்கப்பட்டுள்ள காவல், வனத் துறையின் சோதனைச்சாவடியின் பரிசோதனைக்குள்படுத்தப்பட்ட பின்னரே வாகன ஓட்டிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

தற்போது கரோனா நோய்ப் பரவலால் தமிழ்நாட்டிலிருந்து கேரளா செல்ல கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இ - பாஸ் அனுமதி பெற்றுச் செல்லும் பொதுமக்கள் குமுளி வழியாகவும், கேரளாவுக்குச் செல்லும் அனைத்து சரக்கு வாகனங்கள் கம்பம்மெட்டு வழியாகவும் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாள்களாக, இந்த எல்லைப் பகுதிகளான கம்பம்மெட்டு, லோயர்கேம்ப் மலைச்சாலையில் உள்ள சோதனைச்சாவடி அருகில் தமிழ்நாடு காவல் துறையினர் மணல் மூட்டைகளை பாதுகாப்பு அரண் போல அமைத்துள்ளனர்.

தமிழ்நாடு காவல் துறையினர்

மேலும் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். எல்லைப்பகுதியில் துப்பாக்கியுடன் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதால் இப்பகுதிகளில் நக்சலைட் ஊடுருவல் உள்ளதோ எனப் பொதுமக்கள் அச்சம் கொள்கின்றனர்.

இது குறித்து காவல் துறையினரிடம் கேட்டபோது, "எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் தமிழ்நாடு காவல் துறையினர் எப்போதும் தயார்நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான், மற்றபடி வேறு எதுவும் இல்லை" எனத் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details