தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீண்டும் இந்தியாவில் நரேந்திர மோடியை பிரதமராக்க வேண்டும் - ஓ.பி.ரவீந்திரநாத்குமார் - இந்தியா

தேனி: மீண்டும் இந்தியாவில் நரேந்திர மோடியை பிரதமராக்க அதிமுக கூட்டணியில் உள்ள அனைத்து கூட்டணி கட்சிகளும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும் என பெரியகுளத்தில் தேனி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஓ.பி.ரவிந்தரநாத் குமார் கூறியுள்ளார்.

ஓ.பி.ரவீந்திரநாத்குமார்

By

Published : Mar 25, 2019, 10:37 PM IST


தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தேனி நாடாளுமன்ற மற்றும் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி இடைதேர்தல் குறித்தும் அதிமுக மற்றும் அதன் கூட்டனி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் மற்றும் தேனி நாடாளுமன்ற வேட்பாளர் ஓ.பி.ரவிந்தரநாத் குமார், பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் மயில்வேல் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பேசிய ஓ.பி.ரவிந்திரநாத் குமார், நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில், மீண்டும் மத்தியில் மோடியை பிரதமராக அமர வைக்க அதிமுக கூட்டணியில் உள்ள அனைத்து கூட்டணி கட்சி நிர்வாகிகளும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

மேலும் பெரியகுளம் பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான. மாம்பழ கூழ் தொழிற்சாலை உருவாக்கித் தருவேன் என வாக்குறிதி அளித்தார்.

இந்தக்கூட்டத்தில், பாமக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details