தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழில் பெயர்ப் பலகைகள் வைக்க வேண்டுகோள்! - Tamil Development Department

தேனிL: பெரியகுளம் பகுதியில் தமிழில் பெயர்ப் பலகைகள் வைக்குமாறு தமிழ் வளர்ச்சித் துறையினர் துண்டு பிரசுரம் விநியோகம் செய்தனர்.

தமிழில் பெயர்ப் பலகைகள் வைக்க வேண்டும்
தமிழில் பெயர்ப் பலகைகள் வைக்க வேண்டும்

By

Published : Dec 24, 2020, 8:11 PM IST

தேனி மாவட்டத்தின் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் இளங்கோவன் தலைமையில் இன்று (டிச.24) பெரியகுளம் பகுதியில் உள்ள கடைகளில் தமிழில் பெயர்ப் பலகைகள் வைக்கக்கோரி துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.

அப்போது, கடைகள், உணவகங்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தமிழில் தான் பெயர்ப்பலகை வைத்திட வேண்டும் என்ற அரசின் உத்தரவுகளை எடுத்துரைத்து துண்டு பிரசுரத்தை விநியோகித்தனர்.

மேலும், “பெயர்ப்பலகையில் நிறுவனத்தின் பெயர் தமிழ் மொழி முதலில் இடம் பெற வேண்டும். வேறு எந்த மொழியாவது பயன்படுத்தினால், அப்பெயர் பலகைக்குள்ளேயே ஆங்கிலப் பெயர் இரண்டாவதாக இடம் பெற வேண்டும். அனைத்து மொழிகளும் ஒரே பெயர்ப் பலகையில்தான் இடம் பெற்றிருக்க வேண்டும்” என எடுத்துரைத்தனர்

அப்போது, ஒரு பெயர் பலகையில் தமிழ் மொழி 50 சதவீத அளவில் பெரியதாகவும், ஆங்கிலம் 30சதவீத அளவிலும், இதர மொழிகள் 20 சதவீத எழுத்துக்களிலும் (50:30:20) இடம் பெற வேண்டும் என்ற அரசின் உத்தரவு நகலை கடை உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது.

அதன்படி, 15 நாள்களுக்குள் தமிழில் பெயர்ப்பலகை வைக்காத நிறுவனங்களின் மீது அபராதம் விதிக்கப்படும் என தமிழ் வளர்ச்சித் துறையினர் எச்ச்சரிக்கை விடுத்தனர். இந்நிகழ்வில், தமிழ் வளர்ச்சித் துறையினருடன், பெரியகுளம் பகுதி தமிழ் ஆர்வலர்கள், புலவர்கள் மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

தமிழ்நாட்டில், தமிழ் ஆட்சி மொழிச் சட்ட வார விழா டிசம்பர் 23ஆம் தேதி முதல் 29ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:அழகிரி தேர்தல் பங்களிப்பை வரவேற்கிறேன் - அண்ணாமலை

ABOUT THE AUTHOR

...view details