தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே க.விலக்கு பகுதியில் அமைந்துள்ளது தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை. மதுரை - தேனி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மருத்துவமனையின் எதிர்புறம் உணவகங்கள், தேநீர் கடைகள் என 25க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
இந்நிலையில், முத்தனம்பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது கடையில் நேற்று முன்தினம் (ஆக.22) இரவு அடையாளம் தெரியாத நபர்கள் உணவுப் பொருள்களைளைத் திருடிச் சென்றுள்ளனர். நேற்று (ஆக.23) முழு ஊரடங்கு என்பதால் கடை திறக்கப்படாத நிலையில், மாலையில் வந்து பார்த்தபோது கடையிலிருந்த பொருள்கள் திருடு போனதைக் கண்டு ராஜேந்திரன் அதிர்ச்சியடைந்தார்.