கேரள மாநிலம் மூணாறு அருகேயுள்ள பெட்டிமுடி எஸ்டெட் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. கனமழையால் ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் எஸ்டேட்டில் பணிபுரியும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் 30 குடியிருப்புகள் சிக்கி மண்ணில் புதைந்தன.
இதில், 80 பேர் வரை காணமால் போனதாக தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து தேசிய, மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவினர், வனத்துறையினர், காவல் துறையினர் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பெட்டிமுடி பகுதியில் நிலவுகின்ற மோசமான வானிலையால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது.