தேனி மாவட்ட பெரியகுளம் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இங்கு சேகரிக்கப்படும் குப்பைகள் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வைகை அணை சாலையில் வடுகப்பட்டி அருகே உள்ள கிடங்கில் கொட்டப்பட்டு மண்புழு உரம் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பெரியகுளம் அருகே குள்ளப்புரம் பகுதியில் உள்ள வராக நதிக்கரையோரம் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் லாரிகளில் எடுத்து வந்த குப்பையை கொட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.
நதியில் குப்பைகளை கொட்ட வந்த லாரிகள் சிறைபிடிப்பு! - நதியில் குப்பைகளை கொட்ட வந்த லாரிகள் சிறைப்பிடிப்பு
தேனி: பெரியகுளம் அருகே நகராட்சி பகுதியின் குப்பைகளை வராக நதியில் கொட்ட வந்த மூன்று டிப்பர் லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
இதன் தொடர்ச்சியாக நேற்றிரவும் (ஜனவரி 22) மூன்று டிப்பர் லாரிகளில் குப்பைகளை கொட்ட வந்தபோது அப்பகுதி மக்கள் சிறைபிடித்தனர். பின்னர் ஜெயமங்கலம் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு குப்பைகளுடன் சிறைபிக்கப்பட்ட லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ஆற்றோரம் உள்ள பகுதிகளை ஆக்கிரமிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இவ்வாறு குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் வராக நதியின் தூய்மை கேள்விக்குறியாவதோடு மட்டுமல்லாது நீர் மாசுபாடு ஏற்பட்டு நிலத்தடி நீர் பாதிப்படைகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதியும் நீர் நிலைகளை ஆக்கிரமிக்கும் செயலை தடுத்திட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.