தேனி:முல்லைப் பெரியாறு அணை கட்டிய ஆங்கிலேய பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுயிக்-ன் 182வது பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் லோயர் கேம்ப்-ல் அமைந்துள்ள மணிமண்டபத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன் பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர் கூறுகையில், 'கர்னல் ஜான் பென்னிகுயிக்-ன் தியாகத்தை நினைவுகூரும் விதமாக அவருக்கு லோயர் கேம்ப்-ல் மணிமண்டபம் அமைத்தது, தேனியில் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்திற்கு அவரது பெயரை சூட்டியது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான்.
மேலும் 5 மாவட்டங்களின் நீராதாரமாகத் திகழும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை முதல் கட்டமாக 142 அடியாக உயர்த்தவும், பேபி அணையை பலப்படுத்திய பின் 152அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றத்தில் பெற்றுத் தந்ததும் ஜெயலலிதா தான். ஆனால், தீர்ப்பிற்கு பின் பேபி அணையை பலப்படுத்தவிடாமல் கேரள அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது.