தேனி:முல்லை பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில், அணையின் நீர்மட்டம் 135.4 அடியாக உயர்ந்துள்ளது. இதையடுத்து, இடுக்கி மாவட்ட ஆட்சியர் ஷீபா ஜார்ஜுக்கு முதல் எச்சரிக்கை (First Warning) தமிழ்நாடு பொதுப்பணித்துறையினர் தகவலை அனுப்பியுள்ளனர்.
இடுக்கி மாவட்டத்தில் பருவமழை தீவிரமாக பெய்து வருவதால், மத்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள மழை எச்சரிக்கை தொடர்கிறது. முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை மேல், எல்லை மட்டமாக 136.30 அடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பின்னர் ஜூலை 20ஆம் தேதி முதல் 30ஆம் தேதிவரை, மேல் எல்லை மட்டம் 136.60 அடியை எட்டும். பெரியாற்றின் இரு கரையோரங்களில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என இடுக்கி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.