தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முல்லைப்பெரியாறு அணையில் மத்திய துணைக் குழுவினர் ஆய்வு - மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணக்குமார்

தேனி: முல்லைப் பெரியாறு அணையில் மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணக்குமார் தலைமையிலான துணைக் கண்காணிப்புக் குழுவினர் முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வு செய்துவருகின்றனர்.

mullai periyar dam sub commitee inspection

By

Published : Nov 19, 2019, 1:17 PM IST

தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாகத் திகழ்கிறது முல்லைப்பெரியாறு அணை. 2014ஆம் ஆண்டு மே மாதம் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ள உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் அணையை கண்காணித்து பராமரிக்க மூவர் குழுவையும் நியமித்தது.

இக்குழுவிற்கு உதவியாக ஐந்து பேர் கொண்ட துணைக் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவராக தற்போது மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணக்குமார் உள்ளார். தமிழ்நாடு பிரதிநிகளாக பெரியாறு சிறப்பு கோட்ட செயற்பொறியாளர் சுப்பிரமணி, உதவி செயற்பொறியாளர் சாம் இர்வின், கேரள பிரதிநிதிகளாக கேரள நீர்ப்பாசனத் துறை செயற்பொறியாளர் ஜோஸ் சக்கிரியா, உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக முல்லைப்பெரியாறு அணைப்பகுதிகளில் பெய்துவந்த தொடர்மழை காரணமாக அணையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் குறித்து இன்று துணைக் கண்காணிப்புக் குழுவினர் ஆய்வு செய்துவருகின்றனர். இதற்காக தேக்கடியில் உள்ள படகுத்துறை வழியாக அணைக்குச் சென்ற தமிழ்நாடு அலுவலர்கள் தமிழ்நாடு படகிலும் கேரளா அலுவலர்கள் கேரளா அரசு படகிலும் தனித்தனியே பயணித்தனர்.

இந்த ஆய்வில் பெரியாறு மெயின் அணை, பேபி அணை, கேலரிப்பகுதி, மதகு பகுதிகளில் மழையின் அளவு, அணையின் நீர்வரத்து, நீர் வெளியேற்றம், சீப்பேஜ் வாட்டர் (கசிவுநீர்) குறித்து ஆய்வு மேற்கொள்கின்றனர்.

முல்லைப்பெரியாறு அணையில் மத்திய துணைக் குழுவினர் ஆய்வு
இதனைத்தொடர்ந்து இன்று மாலை குமுளியிலுள்ள பெரியாறு அணை கண்காணிப்புக் குழு அலுவலகத்தில் துணைக்கு ழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் அணை ஆய்வு குறித்த விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு அது குறித்த அறிக்கை மூவர் கண்காணிப்புக் குழு தலைவரான குல்சன்ராஜுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளன.

கடந்த மாதம் அக்டோபர் 4ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 125.60 அடியாக இருந்தபோது ஆய்வு செய்யப்பட்டது. தற்போது நீர்மட்டம் 128.45 அடியாக அதிகரித்துள்ள நிலையில் முல்லைப்பெரியாறு அணையில் மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணக்குமார் தலைமையில் இன்று ஆய்வு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details