தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முல்லைப் பெரியாறு அணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! - Iduki Mullai Periyar Dam

தேனி: தொடர்மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணையின் நீர் திறந்து விடப்படுவதால் ஆற்றங்கரையோரங்களுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முல்லை பெரியாறு அணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள ஆபாய எச்சரிக்கை!

By

Published : Aug 8, 2019, 12:10 PM IST

கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வருவதையொட்டி இடுக்கி மாவட்டத்தில் கனமழை பெய்துவருகின்றது. இதனால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான தேக்கடி, வண்டிப்பெரியாறு, ஆனவச்சால் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்துவருகிறது. இதில் அதிகபட்சமாக பெரியாற்றில் 181.6 மி.மீ. தேக்கடியில் 85 மி.மீ. மழையளவு பதிவாகியுள்ளது.

நேற்று முழுவதும் அப்பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் இரண்டு அடி உயர்ந்துள்ளது. இதில் இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 116 அடியாக அதிகரித்துள்ளது. தற்போது அணையில் 1907 மி. கனஅடி நீர் இருப்பு உள்ளது.

இந்நிலையில் அணைக்கு நீர்வரத்தும் 4,318 கனஅடியாகவும் அதிகரித்துள்ளதால் தமிழ்நாட்டின் பகுதிகளுக்கு திறந்துவிடப்படும் தண்ணீரும் 300 கனஅடியிலிருந்து 600 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் தேனி மாவட்டத்தில் உள்ள முல்லை ஆற்றங்கரை பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என பொதுப்பணித் துறையினர் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details