கேரள மாநிலம் தேக்கடியில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் முக்கிய நீர் ஆதாரமாகத் திகழ்கிறது.
2014ஆம் ஆண்டு இந்த அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்திக்கொள்ள உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் அணையைக் கண்காணித்து பராமரிக்க மூவர் குழுவை நியமித்தது. இக்குழுவிற்கு உதவியாக துணைக் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவராக மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணக்குமார் உள்ளார். இதனையடுத்து மத்திய துணைக் குழுவினர் இன்று முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு செய்தனர். இதற்காக தமிழ்நாடு அலுவலர்கள் பொதுப்பணித்துறை படகிலும் கேரளா அலுவலர்கள் கேரள வனத்துறையினரின் படகிலும் சென்றனர்.