தேனி:தமிழ்நாடு-கேரளா எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது, முல்லைப் பெரியாறு அணை. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் விவசாய மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது, முல்லைப்பெரியாறு அணை.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால் அணையின் நீர்வரத்து அதிகரித்து தற்போது அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1,543 கன அடியாக உள்ளது.
இதனால், முல்லைப்பெரியாறு அணையின்(Mullai Periyar Dam) நீர்மட்டம் 138 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் மட்டம் 138 அடியை எட்டியதால் கேரளப்பகுதியில் உள்ள மக்களுக்கு தமிழ்நாடு பொதுப்பணித்துறையின் சார்பில் இன்று (நவ.17) இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது ஒரு சம்பிரதாயமான இரண்டாம் கட்ட வெள்ள எச்சரிக்கையாக கருதப்படும்.
இதையும் படிங்க: காற்றழுத்த தாழ்வு பகுதி: மீண்டும் கனமழை - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை