தேனி மாவட்டம், ஆனைவச்சாலில் கார் பார்க்கிங் அமைக்கப்பட்ட இடமானது பெரியாறு அணையின் நீர்த்தேக்க பகுதியில் அமைந்துள்ளதாகவும், இதனால் அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதில் சிக்கல் ஏற்படுவதாகவும் தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக விவசாயிகளும், தமிழக அரசும் தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், கார் பார்க்கிங் அமைக்கப்பட்ட பகுதி, பெரியாறு அணை நீர்த்தேக்க பகுதியில் உள்ளதா என இட அளவீடு செய்யக்கோரியும், அதுவரை வாகனங்கள் மட்டும் அப்பகுதியில் நிறுத்திக்கொள்ளலாம், புதியதாக கட்டடப்பணிகள் எதுவும் செய்யக்கூடாது என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
'கார் பார்க்கிங் விவகாரத்தை அவசர வழக்காக விசாரியுங்க..!' - விவசாயிகள் முறையீடு - theni farmers\
தேனி: "முல்லைப் பெரியாறு அணையின் நீர் தேக்கப்பகுதியில், கேரள வனத்துறையின் கார் பார்க்கிங் கட்டுமான பணி நடந்து வருதால், உச்ச நீதிமன்றம் அதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்" என்று, விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆனால், கேரள வனத்துறை இந்த உத்தரவை காற்றில் பறக்கவிட்டு கடந்த சில மாதங்களாக கார் பார்க்கிங் பகுதியில் கட்டுமானப் பணிகளை மும்முரமாக செய்து வருகிறது. கற்களால் காம்பவுண்ட் சுவர் அமைத்து, பேவர் பிளாக் மூலம் தரைத்தளம் அமைக்கப்பட்டு வருகிறது. பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை மீறி, கேரள வனத்துறை கார் பார்க்கிங் கட்டுமானப் பணிகள் செய்து வருவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இருந்த போதிலும், தேக்கடியில் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பெரியாறு அணை நீர்த்தேக்கப்பகுதியான ஆனைவச்சாலில் கார் பார்க்கிங் கட்டுமானப் பணிகள் முடிந்து விட்டால், 152 அடி நீர் எப்போதும் அணையில் தேக்க முடியாத நிலை ஏற்பட்டு விடும். தற்போது தமிழக அரசு வழக்கு தொடர்ந்த போதிலும், கேரள வனத்துறை பணிகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. அதனால் உச்ச நீதிமன்றம் இதனை அவசர வழக்காக எடுத்து விசாரணை செய்வதுடன், பணிகளை உடனடியாக நிறுத்திட உத்தரவிட வேண்டும். இல்லாவிட்டால், தமிழக விவசாயிகள் இப்பிரச்னைக்காக மீண்டும் போராட்டக்களத்தில் குதிக்க தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவித்தனர்.