தேனி மாவட்டம் போடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளரும், திருப்பூர் எம்பியுமான சுப்புராயன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது, "எந்த ஒரு முன்னறிவிப்பின்றி மத்திய அரசு ஊரடங்கை அறிவித்து இந்திய மக்களை பரிதவிக்க வைத்தது. இதனால் யாத்திரையை போல் அவரவர்கள் சொந்த ஊர்களுக்கு மக்கள் சென்றனர். எடுத்தோம், கவிழத்தோம் என்று மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் அரசின் பொறுப்பற்ற செயலை இது காட்டுகிறது.
ஆயிரம் அமித் ஷா வந்தாலும் இதை மாற்ற முடியாது - சுப்புராயன் எம்பி - Can't change even if a thousand Amitsha come
தேனி: மக்களவைத் தேர்தலைப் போன்று சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி படுதோல்வி அடையும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் சுப்புராயன் தெரிவித்தார்.
mp subburayan
கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக -அதிமுக கூட்டணி அனைத்து இடங்களிலும் பரிதாபமாக தோல்வியடைந்ததைப் போல, வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும் இக்கூட்டணி படுதோல்வி அடையும். திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் அனைத்து இடங்களிலும் அமோக வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைக்கும். ஆயிரம் அமித்ஷா வந்தாலும் இதனை மாற்ற முடியாது" என்றார்.
இதையும் படிங்க:சுற்றுப்புறச் சூழல், நீர்நிலைகளை பாதுகாக்க தவறிய அதிமுக - கனிமொழி குற்றச்சாட்டு