தேனி மாவட்டம் போடி அருகேயுள்ள ஜே.கே.பட்டி கீரைக்கடைத் தெருவில் வசித்து வந்தவர் பால்பாண்டி. இவரது மனைவி லட்சுமி (36). இவர்களுக்கு அனுசியா(19), ஐஸ்வர்யா(15), அட்சயா(10) என்ற மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன் கணவர் உயிரிழந்தார், குடும்ப வறுமையின் காரணமாக லட்சுமி ஏலக்காய் தோட்டத்தில் தினக்கூலியாக வேலை செய்து வந்துள்ளார்.
வறுமையின் கோர பிடியில் தத்தளித்த குடும்பம்... கூட்டாகத் தற்கொலை?
தேனி: குடும்ப வறுமையின் காரணமாக போடியில் தாய், மகள்கள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயன்றதில் செய்ததில் இருவர் உயிரிழப்பு.
இந்நிலையில், இன்று அதிகாலை தனது மூன்று பிள்ளைகளுடன் சேர்ந்து, தானும் நஞ்சருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அண்டை வீட்டார் இவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிப்பதற்குள் அனுசியா, ஐஸ்வர்யா என்ற இரு பெண் பிள்ளைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் லட்சுமி, அட்சயா ஆகிய இருவரும் போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் லட்சுமியின் உடல்நிலை மிக அபாய கட்டத்தில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது இருவரையும் மேல் சிகிச்சைக்காகத் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இது குறித்து போடி நகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நால்வர் நஞ்சருந்தி தற்கொலை செய்ய முயன்றதில் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.