தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பெருமாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் வீராச்சாமி – சுமதி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடன் தொல்லையால் சிரமப்பட்டு வந்த சுமதி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாலில் அரளி விதையை அரைத்துக் குடித்துவிட்டு தனது ஐந்து மாத ஆண் குழந்தைக்கும் அதைக் கொடுத்துள்ளார்.
நீண்டநேரம் ஆகியும் சுமதி வீடு பூட்டியே இருந்ததால் உறவினர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது தாயும் குழந்தையும் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து இருவரையும் மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் குழந்தை சபரியின் நிலை மோசமடைந்ததையடுத்து மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.