தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிசிடிவி: தேனியில் வெறிநாய் கடித்ததில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் - Admission to Government Hospital for treatment

தேனி அருகே ஆண்டிப்பட்டியில் வெறிநாய் கடித்ததில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிசிடிவி:வெறிபிடித்த நாய் கடித்ததில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்- பெதுமக்கள் பீதி
சிசிடிவி:வெறிபிடித்த நாய் கடித்ததில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்- பெதுமக்கள் பீதி

By

Published : Oct 29, 2022, 10:34 PM IST

தேனி: ஆண்டிப்பட்டியில் உள்ள கொண்டம நாயக்கன்பட்டியில் கடந்த சில நாட்களாக வெறிபிடித்த நாய்கள் சாலைகளில் சுற்றி திரிகிறது. சாலையில் நடந்து செல்லும் 20க்கும் மேற்பட்ட பொது மக்களை கடித்ததாக நாய்களை பிடிக்க பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்தனர்.

இதுகுறித்து ஆண்டிப்பட்டி பேரூராட்சியிடம் புகார் தெரிவிக்கப்பட்டு பேரூராட்சி பணியாளர்கள் சாலையில் சுற்றி திரியும் வெறிபிடித்த நாய்களை பிடித்து வருகின்றன.

சிசிடிவி

இந்நிலையில் இன்று ஆண்டிப்பட்டி பேருந்து நிலையம் அருகே வெறிபிடித்த நாய் பொது மக்களை கடிப்பதாக புகார் வந்தது. இதையடுத்து பேரூராட்சி ஊழியர்கள் நாயை பிடிப்பதற்காக வந்தனர். அப்போது நாய் அவர்களிடமிருந்து தப்பித்து அருகே உள்ள ரைஸ் மில்லுக்குள் சென்று அங்கிருந்தவர்களை கடிக்க தொடங்கியது.

அதன் பின்பு ரைஸ்மில் இருந்து வெளியே வந்த முதியவரின் காலை கடித்த வெறிநாய் ரைஸ்மிலுக்குள் சென்ற அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் ரைஸ்மில் ஊழியர்களை என மூன்று பேரை கடித்தது. பின்னர் வெறிபிடித்த நாயை பேரூராட்சி ஊழியர்கள் பிடித்து வாகனத்தில் ஏற்றி சென்றனர்.

இதே போல் ஆண்டிப்பட்டியில் வெறிபிடித்த நாய்களின் தொல்லை அதிகரித்திருப்பதால் குழந்தைகளுடன் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல அச்சத்துடனே இருக்கின்றனர்.

இதையும் படிங்க:முன்னாள் டிஜிபியின் மருமகள் கைது

ABOUT THE AUTHOR

...view details