தேனி: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள அரசு தோட்டக்கலைக் கல்லூரியின் அரங்கில், தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு பட்டா வழங்கும் முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்வில், தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பங்கேற்றார். மேலும், இந்த சிறப்பு முகாமில் ஆயிரத்து 360 பயனாளிகளுக்கு 8.84 கோடி ரூபாய் மதிப்பிலான விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கினார். பின்னர் விழா மேடையில் அமைச்சர் சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, தமிழகம் முழுவதும் வீடற்ற ஏழை மக்கள், பழங்குடியின மக்கள் உள்ளிட்ட பலருக்கு அரசுத் தரப்பில் 100 இடங்களில் வீட்டுமனைப் பட்டா வழங்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. அந்த வகையில், தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் ஆயிரத்து 360 பயனாளிகளுக்கு, 8.84 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டு மனைப் பட்டாக்களை, மக்களுக்கு விலையில்லாமல் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:நிலவிற்கு மனிதனை அனுப்பி பூமிக்கு பாதுகாப்பாக கொண்டு வருவதே குறிக்கோள் - இஸ்ரோ தலைவர் சோமநாத்