தேனி:மாவட்டம் கூடலூர் நகரில் மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் கூடலூர் அரசு மருத்துவமனை அருகே புதிதாக பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் காரணமாக வாகனங்கள் ஒரு வழித்தடத்தில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கூடலூர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக சாலையோரத்தில் மணல் சரிந்தது.
இதையடுத்து அதிகாலை காலை 5 மணி அளவில் அரசு பேருந்து ஒன்று 25க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கோயம்புத்தூரில் இருந்து குமுளி நோக்கி சென்றுள்ளது. அப்போது சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் எதிர்பாரதவிதமாக பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பேருந்து கவிழ்ந்த உடன் அருகில் இருந்த மக்கள் கூடலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பொதுமக்களின் உதவியுடன் விபத்தில் படுகாயமடைந்தவர்களை கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.