தமிழ்நாட்டில் கள்ளர், மறவர் உள்ளிட்ட 68 உட்பிரிவுகளை உள்ளடக்கிய சீர்மரபினர் சமூக மக்கள் தங்களுக்கு வழங்கப்படும் டி.என்.டி / டி.என்.சி ஆகிய இரட்டைச் சான்றிதழ் முறையை ரத்து செய்து டி.என்.டி என்ற ஒற்றைச் சான்றிதழ் வழங்க வேண்டியும் டி.என்.டி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக்கோரியும் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
மதுரை மாவட்டம், கிண்ணிமங்கலத்தில் கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் சீர்மரபினர் சமூக மக்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பலரது உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும் இதனை அரசுக்கு சுட்டிக்காட்டும் விதமாக தேனியில் உள்ள சீர்மரபினர் சமூக மக்கள் நேற்று (ஜன. 04) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி சவப்பெட்டியுடன் முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.