தேனி மாவட்ட அதிமுக அம்மா பேரவையுடன் பெரியகுளம் அருகே உள்ள ரோஸி வித்யாலயா பள்ளி இணைந்து, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாநில அளவில் பெண்களுக்கான கோ-கோ விளையாட்டுப் போட்டிகளை நடத்தியது.
கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி தொடங்கி நேற்று இதற்கான இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் பெரியகுளம் ரோஸி வித்யாலயா அணியை வீழ்த்தி சிவகங்கை அணி வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பு விருந்தினராக தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் குமார், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்துகொண்டு போட்டியில் வெற்றிபெற்ற அணியினருக்கு கோப்பைகள் வழங்கினர்.
இவ்விழாவில் பேசிய ஓபிஆர், சிங்கப்பெண்ணே என்ற பாடலில் இடம்பெற்ற வரிகள் எல்லாம் பெண்களுக்கு உற்சாகத்தை தரக்கூடியதாக இருக்கும். அந்தப் பாடலில் உள்ள வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்துகாட்டி மறைந்தவர்தான் ஜெயலலிதா என்றார்.