தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அமைச்சருக்கு நேர்ந்த சோதனை; காலி சேர்களை பார்த்து பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி - dmk

தேனியில் நடந்த திமுகவின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில், மழை காரணமாக யாரும் பங்கேற்காத நிலையில், சேர்கள் அனைத்தும் காலியாக இருந்த நிலையிலும் அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்ந்து பேசினார்.

minister periyasamy
அமைச்சர் ஐ.பெரியசாமி

By

Published : May 10, 2023, 11:19 AM IST

சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அமைச்சருக்கு வந்த சோதனை

தேனி:ஆண்டிப்பட்டி வைகை அணை சாலை பிரிவில் ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் வீட்டின் முன்பாக ‘திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்’ நடைபெற்றது. இதில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது.

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த கூட்டம் மாலை 6.30 மணிக்கு தொடங்கியது. பொதுக் கூட்டத்திற்குப் பெரிதாகக் கூட்டம் வரவில்லை என்றாலும் வருகை தந்திருந்த ஒரு சில மக்களும் சாரல் மழை தொடங்கியதும் அவரவர்கள் வீட்டை நோக்கி நடையைக் கட்ட தொடங்கினர். இதனால் பொதுக்கூட்ட மேடையைத் தவிர்த்து கீழே உள்ள ஆயிரம் நாற்காலிகளும் காலி ஆகியதால் ஆட்களே இல்லாத பொதுக்கூட்டமாக மாறியது.

இந்நிலையில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை குறித்து அமைச்சர் பேசத் தொடங்கியதும் நின்றிருந்த ஒரு சில மக்களும் மழையின் காரணமாக தங்கள் வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றனர். பொதுமக்கள் யாரும் இல்லாத நிலையிலும் காலி நாற்காலிகளுக்கு மத்தியில் அமைச்சர் ஐ.பெரியசாமி திமுகவின் சாதனைகளையும், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் பெருமைகளையும் நான் கூறாமல் செல்ல மாட்டேன் என்று உறுதியோடு ஸ்டாலினின் பெருமைகளை மேடையில் காலி நாற்காலிகளுக்கு மத்தியில் உரையாற்றினார்.

மேலும் ஆண்டிப்பட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் வீட்டின் முன்பாக நடைபெற்ற இந்த சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில், ஆட்கள் வராமல் இருப்பது திமுக தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் யாருமே இல்லாத கூட்டத்தில் மேடையில் நின்று யாரிடம் அமைச்சர் பேசுகிறார் என்று ஆண்டிப்பட்டி மக்கள் நகைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: Rasi Palan: மேஷ ராசிக்காரர்களுக்கு வெற்றி... உங்க ராசிக்கு என்ன?

ABOUT THE AUTHOR

...view details