தேனி மாவட்டம் பெரியகுளத்தில் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி அந்த மாவட்டத்திற்கு சென்றார். அப்போது அமைச்சர் கயல்விழி திடீரென ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள் மற்றும் மாணவிகள் விடுதிகளை ஆய்வு செய்ய முடிவு செய்தார். அந்த வகையில் தேனி பங்களாமேட்டில் இயங்கி வந்த ஆதிதிராவிட மாணவியர்கள் விடுதியினை ஆய்வு செய்தார்.
அங்கு மாணவிகளுக்கு செய்து தரபட்ட வசதிகள் குறித்தும், ஒவ்வொரு அறையாக அவர் ஆய்வு செய்தார், பின்னர் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் செயல்பட்டு வரும் அரசு துவக்க பள்ளியில் ஆய்வு செய்த அமைச்சர் பள்ளியின் கட்டடத்தை உடனடியாக புதுப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் மாவட்ட ஆட்சியரை கேட்டு கொண்டார்.