தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் இன்று சாரல் விழா நடைபெற்றது. சுற்றுலாத் துறை சார்பில் நடைபெற்ற இவ்விழாவில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், இறைவனின் அருளாசி ஒரு சிலருக்கு மட்டும்தான் கிடைக்கும். அந்த அருளாசி கிடைக்கப் பெற்றவர் நமது ஓபிஎஸ் என்றார். மேலும், முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் நான்கு கண்கள், ஆனால் பார்வை ஒன்று தான் என்று கூறிய அவர், இருவரும் ஒற்றுமையாக இருந்து கட்சி, ஆட்சியை சிறப்பாக வழிநடத்துகிறார்கள் என்றார்.