தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காட்டு யானை தாக்கி கூலித் தொழிலாளி உயிரிழப்பு! - தேனி லேட்டஸ்ட் செய்திகள்

தேனி: மேகமலை அருகே விறகு சேகரிக்கச் சென்ற கூலித் தொழிலாளி காட்டு யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமாவாசை
அமாவாசை

By

Published : Dec 16, 2020, 9:01 AM IST

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகேள்ள 7 மலைக்கிராமங்களில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்துவருகின்றனர். அங்குள்ள மேகமலை வன உயிரின சரணாலயத்திற்குள்பட்ட பகுதியில் யானை, சிறுத்தை, புலி, கரடி, அரியவகை குரங்குகள் உள்பட வன விலங்குகள் ஏராளமானவை வசித்துவருகின்றன.

மேலும் அப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலானோர் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களே. இந்நிலையில் மணலாறு பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி அமாவாசை (58) வழக்கம்போல் விறகு சேகரிப்பதற்காக, தேயிலைத் தோட்டத்திற்கு நேற்று (டிச. 15) சென்றார்.

அப்போது காட்டுயானை ஒன்று அமாவாசையைத் தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வனத் துறையினர், அமாவாசையின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details