தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேனி மேகமலையில் காரை தாக்கிய யானைகள்: பதைபதைக்க வைக்கும் வீடியோ! - elephants strolling in the night

தேனி அருகே மேகமலை வனப்பகுதியில் நள்ளிரவில் உலா வரும் காட்டயானைகள் காரை சேதப்படுத்தி சென்ற சம்பவத்தால் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

காரை சேதப்படுத்திய காட்டு யானைகள்: பதைபதைக்கும் சிசிடிவி காட்சி
காரை சேதப்படுத்திய காட்டு யானைகள்: பதைபதைக்கும் சிசிடிவி காட்சி

By

Published : Nov 29, 2022, 10:38 PM IST

தேனி: சின்னமனூர் அருகே ஹைவேவிஸ் பேரூராட்சிக்கு உட்பட்ட மேகமலை வன உயிரின சரணாலயம் பகுதி அமைந்துள்ளது. அந்தப் பகுதியில் தேயிலைத் தோட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஹைவேவிஸ் பேரூராட்சிக்கு உட்பட்ட 7 மலை கிராமங்களில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்கு நள்ளிரவில் கூட்டமாக வந்த யானைகள் வீட்டின் வாசலில் உள்ள பூச்செடிகள் மற்றும் கதவுகளை சேதப்படுத்தி செல்வது வழக்கம். இந்நிலையில் மணலாறு தொழிலாளர் குடியிருப்பில் நள்ளிரவில் வந்த யானைக் கூட்டங்கள் அலெக்சாண்டர் என்ற நபர் நிறுத்தி வைத்திருந்த காரை சேதப்படுத்தி சென்றிருப்பதை சிசிடிவி காட்சியில் பார்த்த தொழிலாளர்கள் அச்சம் அடைந்து வனத்துறை மற்றும் காவல்துறையினிடம் புகார் தெரிவித்தனர்.

காரை சேதப்படுத்திய காட்டு யானைகள்: பதைபதைக்கும் சிசிடிவி காட்சி

மேலும், குடியிருப்பு பகுதிகளுக்குள் வரும் வன விலங்குகளின் நடமாட்டத்தை தடுப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: சர்ப்ரைஸ் விசிட் அடித்த டிஜிபி.. தயாராக இருந்த போலீசார்..!

ABOUT THE AUTHOR

...view details