தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரு டன் மாங்காய் ரூ. 1 லட்சம் - கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவு விலை உயர்வு - பெரியகுளம்

போதிய அளவு விளைச்சல் இல்லாத காரணத்தினால் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஒரு டன் காளைபாடி மாங்காயின் விலை 1 லட்சம் ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

மாங்காய் விலை: கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரிப்பு!
மாங்காய் விலை: கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரிப்பு!

By

Published : Jul 8, 2022, 3:31 PM IST

தேனி: பெரியகுளம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான கும்பகரை, சோத்துபாறை, தொண்டகத்தி, அழகாமடை, தென்கரை ஆகிய பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவில் மா மரங்கள் வளர்க்கபட்டு, மா விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தாண்டு அதிக விளைச்சல் கிடைக்கும் என எண்ணி இருந்த விவசாயிகளுக்கு பூ பூக்கும் சமயத்தில் பெய்த கனமழை மாங்காய் விவசாயிகளுக்கு பேரிடயாக அமைந்தது.

பூக்கள் அனைத்தும் மழைக்கு தாக்குபிடிக்க முடியாமல் உதிர்ந்தும், அழகியும் போன நிலை விளைச்சலை பெருமளவில் குறைத்தது மேலும் இந்த பகுதியில் உள்ள மாடுகள் மற்றும் காட்டு பண்றிகள் மாந்தோப்பில் புகுந்தும் மாங்காயினை கடுமையாக சேதபடுத்தியது. இதன் காரனமாகவும் இந்த பகுதியில் மாங்காய் உற்பத்தி மிகவும் கடுமையாக பாதிக்கபட்டது.

விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டதால் மாங்காய்க்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அதன் விலை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. தற்போது காசா வகை மாங்காய் 1 டண் 35 ஆயிரம் ரூபாய்க்கும், நாட்டுக்காய் வகை 15 ஆயிரம் ரூபாய்க்கும், காளைப்பாடி வகை 1 லட்சத்திற்கும், நடுத்தர நாட்டுக்காய் 15 ஆயிரத்திற்கும், இரண்டாம் ரகம் காசா வகை மாங்காய் 25 ஆயிரம் ரூபாய்க்கும் விலை போகிறது.

மாங்காய் விலை: கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரிப்பு!

கடந்த ஆண்டு ஒரு டன் கல்லாமை வகை மாங்காய் 4 ஆயிரம் ரூபாயிக்கு விற்பனையான நிலையில் இந்த ஆண்டு அது 2 மாதங்களுக்கு முன்பு 25 ஆயிரம் ரூபாயாகவும், தற்போது 55 ஆயிரம் ரூபாயாகவும் விற்பனையாகிறது. பெரியகுளம் பகுதியில் விளையும் மாங்காய்கள் பெரும்பாலும் கேரளா மாநிலத்திற்கும், பழ சாறு தயாரிக்கும் நிறுவனத்திற்கும் அனுப்பி வைக்கபடுகிறது.

கடும் பாதிப்பினை சந்தித்த போதிலும் மா விவசாயிகளுக்கு இந்த விலை ஏற்றம் மிகப்பெரிய ஆறுதலை தந்துள்ளது. 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் மாங்காய் விலை செல்வதால் மா விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

ABOUT THE AUTHOR

...view details