தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரியகுளத்தில் நடைபெற்ற மா தினவிழா! - மா தினவிழா

தேனி: பெரியகுளத்தில் நடைபெற்ற மா தின விழாவில் 300-க்கும் மேற்பட்ட மாம்பழ வகைகள் காட்சிப்படுத்தப்பட்டன.

mango

By

Published : Jun 21, 2019, 9:27 AM IST

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தோட்டக்கலை கல்லூரி; ஆராய்ச்சி நிலையம் சார்பில் மா விழா கண்காட்சி, கருத்தரங்கம் இன்று நடைபெற்றது.

இந்தக் கண்காட்சி, இடுபொருட்கள் கண்காட்சியை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் குமார் திறந்துவைத்து பார்வையிட்டார். இதில் காசாலட்டு, மல்கோவா, அல்போன்சா, கல்லாமை, செந்தூரம், சக்கரக்கட்டி, உள்ளிட்ட சுமார் 350 மா ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

பின்னர் பருவநிலை மாற்றம், நோய்த்தாக்குதல், புதிய ரக விளைச்சல் ஆகியவை குறித்து கருத்தரங்கில் விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த துணைவேந்தர் குமார் கூறுகையில், தோட்டக்கலை கல்லூரி; ஆராய்ச்சி நிலையத்தில் மேற்கொள்கின்ற ஆராய்ச்சிகளை விவசாயிகள், மாணவர்கள் என அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் பழக்கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. இதில் முக்கனிகளான மா, பலா, வாழை குறித்து கண்காட்சிகள் தோட்டக்கலை கல்லூரிகளில் நடத்தப்பட்டுவருகிறது.

பெரியகுளத்தில் நடைபெற்ற மா தினவிழா

முந்தைய பருவம், நடுப்பருவம், பிந்தைய பருவம் ஆகிய பருவ நிலைகளில் விவசாயிகள் எதிர்கொள்ளவிருக்கும் பிரச்னைகள் குறித்தும் ஆலோசனைகள் அளிக்கப்படுகின்றன. மேலும் அனைத்துக் கால நிலைகளிலும் நுகர்வோருக்கும் மா கிடைத்திடும் வகையில் மதிப்புக் கூட்டப்பட்ட தொழில்நுட்பத்தில் வரும் காலங்களில் மா விளைச்சல் நடைபெறுவதற்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது வறட்சி நிலவுவதால் சொட்டுநீர் பாசன முறையை பயன்படுத்தி விளைச்சலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்தார். இந்தக் கருத்தரங்கில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள், பள்ளி - கல்லூரி மாணவ மாணவியர் என சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details