தேனியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்கப்பட வேண்டும் என்பது அம்மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது. தொடர் கோரிக்கைகளுக்குப் பிறகு, தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவில், பள்ளி கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்காக எட்டு ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், புதிய பள்ளியின் கட்டுமானப் பணிகள் முடியும்வரை தற்காலிகமாக தேனி அல்லிநகரம் நகராட்சி தொடக்கப் பள்ளியில் 20 வகுப்பறைகள், விளையாட்டு மைதானம், சுற்றுச்சுவர், கழிப்பறை, மின்சாரம், நீராதாரம் உள்ளிட்ட பிற வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.