தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீட் தேர்வு முறைகேடு வழக்கு; இடைத்தரகர் ரசீத்தை காவலில் விசாரிக்க அனுமதி - theni district news

தேனி: நீட் தேர்வு முறைகேடு வழக்கில் கைதான இடைத்தரகர் ரசீத்தை 3 நாள் காவலில் விசாரிக்க சிபிசிஐடிக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இடைத்தரகர் ரசீத்தை காவலில் விசாரிக்க அனுமதி
இடைத்தரகர் ரசீத்தை காவலில் விசாரிக்க அனுமதி

By

Published : Jan 9, 2021, 6:44 AM IST

நீட் தேர்வு முறைகேடு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த ரசீத் (40) என்பவர் தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி பன்னீர்செல்வம் முன்னிலையில் சரணடைந்தார்.

அதன்பின்னர், இடைத்தரகர் ரசீதை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். இதனிடையே இடைத்தரகர் ரசீத்தை 7 நாள் காவலில் எடுத்து விசாரிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என சிபிசிஐடி தரப்பில் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணைக்கு பெரியகுளம் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த இடைத்தரகர் ரசீத், நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது வருகின்ற 11ஆம் தேதி வரை 3 நாள் விசாரணைக்கு அனுமதி அளித்து நீதித்துறை நடுவர் நீதிபதி பன்னீர்செல்வம் உத்தரவிட்டார். இதையடுத்து ரசீத்தை மதுரை அலுவலகத்திற்கு சிபிசிஐடி காவல் துறையினர் அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க:நீட் தேர்வு முறைகேடு - தேடப்பட்டு வந்த இடைத்தரகர் சிறையில் அடைப்பு!

ABOUT THE AUTHOR

...view details