தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மாஃபா பாண்டியராஜன் ஒரு புள்ளி ராஜா' - ஓபிஎஸ் நக்கல்! - Mafa Pandiarajan

தேனி: தேனியில் நடைபெற்ற பள்ளி நூற்றாண்டு விழாவில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை 'புள்ளிராஜா' என்று ஓபிஎஸ் நக்கலடித்ததால் சிரிப்பலை எழுந்தது.

நிகழ்வில் கலந்து கொண்ட பன்னீர் செல்வம் மற்றும் மாஃபா பாண்டியராஜன்

By

Published : Feb 17, 2019, 7:50 PM IST

நிகழ்வில் கலந்து கொண்ட பன்னீர் செல்வம் மற்றும் மாஃபா பாண்டியராஜன்
தேனியில் நாடார் சரஸ்வதி தொடக்க பள்ளியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி கடந்த 3 தினங்களாக நடைபெற்று வருகிறது. இறுதி நாளான இன்றைய நிகழ்வில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், "காமராஜரின் திட்டங்களை சாதனையாக மாற்றிக் காட்டியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இந்தியாவிலேயே மாணவர் சேர்க்கை மற்றும் தேர்ச்சி சதவிகிதத்தில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.

தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சராக மாஃபா பாண்டியராஜன் நுணுக்கங்களை அறிந்து பணியாற்றி வருகிறார். தமிழ் வளர்ச்சி மற்றும் ஆட்சி மொழி துறை அமைச்சராக இருக்கும் மாஃபா பாண்டியராஜன், இதற்கு முன் இதே துறையில் இருந்த அமைச்சர்களில் சிறந்த அமைச்சர்.

ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு 20 கோடி நிதிக்காக தமிழக அரசு சார்பாக 10 கோடியும், மீதமுள்ள 10 கோடி ரூபாய் பாண்டியராஜனின் முயற்சியாலேயே கிடைக்கப் பெற்றது. அந்த அளவு சிறப்பாக பணியாற்றி வருகிறார்.

அவர் புள்ளி விபரங்களை கூறுவதில் புலி. அதனால் வைகைச்செல்வன் அவருக்கு புள்ளி ராஜா என்று பெயரே வைத்துள்ளார்", என்று நக்கலுடன் பேசி முடித்தார்.


ஓபிஎஸின் இந்த கலகலப்பான பேச்சால் அங்கிருந்த ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைவரிடையே சிரிப்பலை எழுந்தது.

ABOUT THE AUTHOR

...view details