தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கிய ரயில் சேவை...பயணிகள் மகிழ்ச்சி!!

மீட்டர் கேஜ் பாதையில் இருந்து அகல ரயில் பாதையாக மாற்றப்பட்ட மதுரை தேனி ரயில் பாதையில் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியோடு பயணம் செய்தனர்.

12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கிய ரயில் சேவை
12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கிய ரயில் சேவை

By

Published : May 27, 2022, 12:52 PM IST

கடந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை தேனி ரயில் பாதை இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் நேற்று காணொலிக் காட்சி மூலம் சென்னையில் இருந்து திறந்து வைக்கப்பட்டது. இதனையடுத்து இன்று காலை முதல் பயணிகள் ரயில் மதுரையிலிருந்து புறப்பட்டு சென்றது.

போடிநாயக்கனூர் அகல ரயில் பாதை திட்டத்திற்காக கடந்த மார்ச் 31ஆம் தேதி வரை ரூபாய் 445.46 கோடி செலவிடப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக மதுரை - தேனி இடையேயான புதிய அகல ரயில் பாதை பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்ட புதிய ரயில் சேவை இன்று முதல் தொடங்கியுள்ளது.

மதுரை - தேனி ரயில் நிலையங்களுக்கு இடையே 75 கிமீ தூரமுள்ள இந்த புதிய அகல ரயில் பாதையில் மூன்று சாலை மேம்பாலங்கள் , ஐந்து பெரிய பாலங்கள் , 161 சிறிய பாலங்கள் . 32 சுரங்கப்பாதைகள் , 17 ரயில்வே கேட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கிய ரயில் சேவை

மேலும், மதுரை தேனி ரயில் சேவையின் முதல் பயணத்தில் பங்கேற்ற பயணிகள் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். 12 ஆண்டுகளுக்கு பிறகு துவக்கப்பட்டுள்ள இந்த ரயில் சேவை மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மதுரையிலிருந்து கூடுதல் சேவைகளை இயக்கினால் பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெரிவித்தனர். மேலும் பேருந்தில் மதுரையிலிருந்து தேனி செல்லும் போது ஏற்படும் சிரமங்கள் தற்போது களையப்பட்டு உள்ளது. ரயில் பயண கட்டணமும் குறைவு என்பதால் குடும்பத்துடன் சென்று வர ஏதுவாக உள்ளது என்றும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

மேலும், மதுரை முதல் தேனி வரை உள்ள வழியோர ஊர்பகுதி மக்கள், மாணவர்கள், வேலைக்கு செல்வோருக்கும் உதவிகரமாக இருக்கும் என்பதால் ஏற்கனேவே உள்ள ரயில் நிறுத்தங்களில் நின்று சென்றால் பெரும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் பயணிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்குப் பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி!

ABOUT THE AUTHOR

...view details