தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விரைவில் மதுரை-ஆண்டிபட்டி இடையே ரயில் சேவை! - மீட்டர் கேஜ் வழித்தடம்

தேனி: மதுரை - போடி அகல ரயில் பாதை பணிகள் வேகமாக நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், மதுரை - ஆண்டிபட்டி வரையிலான பயணிகள் ரயில் சேவை அடுத்தாண்டு முதல் தொடங்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் மதுரை-ஆண்டிபட்டி இடையே ரயில் சேவை!
விரைவில் மதுரை-ஆண்டிபட்டி இடையே ரயில் சேவை!

By

Published : Nov 11, 2020, 7:32 PM IST

மீட்டர் கேஜ் வழித்தடமாக இருந்த மதுரை - போடி ரயில் பாதை, அகல ரயில் பாதையாக மாற்றுவதற்காக 2010ஆம் ஆண்டு முதல் இந்தப் பாதையில் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. 90 கி.மீ. தொலைவுடைய இந்த ரயில் பாதை பணிகள் போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததால் ஆமை வேகத்தில் நடைபெற்றுவந்தன.

இதனையடுத்து மதுரை - போடி அகல ரயில் பாதைக்குத் தேவையான நிதி, மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளாக பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.

இதன் காரணமாக முதற்கட்டமாக மதுரை முதல் உசிலம்பட்டி வரையிலான 37 கி.மீ. வழித்தடம் பணிகள் நிறைவுபெற்றன. இதற்கான சோதனை ஓட்டம் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து உசிலம்பட்டி முதல் போடி வரையிலான 53 கி.மீ. தூர வழித்தடங்களில் பணிகள் துரிதமாக நடைபெற்றுவருகின்றன.

இவற்றில் தற்போது ஆண்டிபட்டி வரையிலான 20 கி.மீ. தூரப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த வழித்தடத்திலிருந்த சுமார் 40 முதல் 50 அடி உயரம் வரை இருந்த பாறைகள் அகற்றும் பணிகள் சற்று சவாலாக அமைந்தது. தொடர்ந்து தண்டவாளம் அமைக்கும் பணிகள் முடிவடைந்து ரயில் செல்வதற்கான உறுதித் தன்மைகள் குறித்து பல கட்ட சோதனை முயற்சிகளும் நடைபெற்றுள்ளன.

தற்போது ஆண்டிபட்டி ரயில் நிலையக் கட்டடம், நடைமேடை, கிராசிங் பாலம் உள்ளிட்ட பணிகள் வேகமாக நடைபெற்றுவருகின்றன. இன்னும் ஓரிரு வாரத்தில் உசிலம்பட்டி முதல் ஆண்டிபட்டி வரை சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட உள்ளன. அதனைத் தொடர்ந்து அடுத்தாண்டு 2021 முதல் மதுரையிலிருந்து ஆண்டிபட்டி வரையிலான 60 கி.மீ. தூரத்திற்கு தினமும் பயணிகள் ரயில் சேவை இயக்க திட்டமிட்டிருப்பதாக ரயில்வே துறையினர் தெரிவித்துள்ளனர்.

மதுரை-போடி ரயில் சேவை விரைவில் தொடங்க உள்ளதால் தேனி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details