தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேனியில் மறுவாக்குப்பதிவில் குறைந்த வாக்குகள்! - இடைத்தோ்தல்

தேனி: ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளை விட மே 19ஆம் தேதி தேனி மாவட்டத்தில் நடைபெற்ற மறுவாக்குப்பதிவின்போது குறைவான வாக்குகளே பதிவாகின.

File pic

By

Published : May 20, 2019, 9:48 AM IST

தமிழ்நாட்டில் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற்ற மக்களவைத் தேர்தல், 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மின்னணு வாக்கு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி தேனி மக்களவைத் தொகுதியில் உள்ள ஆண்டிபட்டி, பெரியகுளம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்குட்பட்ட இரு வாக்குச்சாவடிகளில் மே 19ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெற்றது.

வாக்காளர்கள் காலை ஆறு மணியில் இருந்து ஆர்வமுடன் வாக்களிக்க காத்திருந்தனர். ஆனால் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட சிறு கோளாறு காரணமாக காலை ஏழு மணிக்கு தொடங்க இருந்த வாக்குப்பதிவு 15 நிமிடம் தாமதமாக தொடங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மாலை வரை அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

பெரியகுளம் தொகுதிக்குட்பட்ட மறுவாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடியில் ஆண்கள் 422 பேர் பெண்கள் 476 பேர் என மொத்தம் 898 பேர் வாக்களித்தனர். ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற்ற தேர்தலின்போது பதிவான வாக்குகளை ஒப்பிடுகையில் ஆறு வாக்குகள் குறைவாக பதிவாகியுள்ளன.

மறுவாக்குப்பதிவில் குறைந்த வாக்குப்பதிவு

ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட திருமலாபுரம் ஊராட்சியிலும் வாக்குபதிவு நடைபெற்றது. ஏப்ரலில் நடைபெற்ற வாக்குப்பதிவில் 1,023 வாக்குகள் பதிவாகியிருந்தன. ஆனால், மே 19ஆம் தேதி மறுவாக்குப்பதிவின்போது அதைவிட 22 வாக்குகள் குறைந்து 1001 வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details