தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்படி 2019ஆம் ஆண்டு மார்ச், ஜூலை, செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் லோக் அதாலத் எனும் மக்கள் நீதி மன்றம் நடத்த தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழு முடிவு செய்துள்ளது. இந்த வகையில் நேற்று தமிழ்நாடு முழுவதும் தேசிய லோக் அதாலத் அந்தந்த பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களில் நடைபெற்றது.
இதில் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகள், வாரிசு உரிமை கேட்பு வழக்குகள், வங்கி வழக்குகள், சிறு குற்ற வழக்குகள், குடும்ப வழக்குகள் மற்றும் நீதிமன்றத்தில் பதிவு செய்யாத வழக்குகள் விசாரிக்கப்பட்டு உடனடியாகத் தீர்வு காணப்பட்டன.
லோக் அதாலத்தில் பல்வேறு வழக்குகளுக்குத் தீர்வு தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் பெரியகுளம், ஆண்டிபட்டி, உத்தமபாளையம் மற்றும் போடி ஆகிய நீதிமன்றங்களிலும், லெட்சுமிபுரத்தில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்திலும் லோக் அதாலத் நடைபெற்றது. இதில் மூன்றாயிரத்து 52 வழக்குகள் தீர்வு காணப்பட்டன.
இதேபோன்று, விருதுநகா் தேசிய மக்கள் நீதிமன்றம் சார்பில் நடைபெற்ற நேஷனல் லோக் அதாலத்தில் மூன்றாயிரத்து 670க்கும் மேற்பட்ட வழக்குகளும், தஞ்சாவூர் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 143 வழக்குகளும், தூத்துக்குடி தேசிய லோக் அதாலத் மூலம் நான்காயிரத்து 466 வழக்குகளுக்கும், பெரம்பலூரில் லோக் அதாலத் மூலம் பல்வேறு வழக்குகளுக்கும் தீர்வு காணப்பட்டன.
இதையும் படிங்க: சைக்கிள் சின்னம் ஒதுக்கக்கோரி தமாகா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!