தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேனியில் போக்சோ சட்டத்தின்கீழ் 60வயது முதியவருக்கு ஆயுள் தண்டனை! - child abusing

தேனி: 7வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 60வயது முதியவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தேனி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

7-year-old-girl-abusing-case

By

Published : Apr 16, 2019, 11:44 PM IST

தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட டி.வி.எஸ் சாலை பகுதியில் உள்ள செல்லத்துரை என்ற 60 வயது முதியவர் கடந்த 2017ஆம் ஆண்டு அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 7வயது சிறுமியை பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் தேனி காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.

வழக்கு விசாரணை தேனி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் குற்றவாளியான முதியவர் செல்லத்துரைக்கு ஆயுள் தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என நீதிபதி திலகம் தீர்ப்பு வழங்கினார்.

இதனையடுத்து குற்றவாளியை தகுந்த பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறைக்கு காவல்துறையினர் கொண்டு சென்றனர்.

போக்சோ சட்டத்தின்கீழ் 60 வயது முதியவருக்கு ஆயுள் தண்டனை

ABOUT THE AUTHOR

...view details