தேனி: பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர், பேச்சியம்மாள். இவருக்கு அழகு ராஜா (வயது17) மற்றும் சிவகுமார் (வயது 16) ஆகிய இரண்டு மகன்கள் இருந்தனர்.
இந்நிலையில் 29.03.2017அன்று இரு மகன்களும் மடிக்கணினிக்கு சண்டை போட்டதில் தாய் பேச்சியம்மாள் அழகு ராஜாவை தட்டிக் கேட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த அழகுராஜா தாய் பேச்சியம்மாளை கட்டையால் தாக்கிய போது ஆத்திரம் அடைந்த தாய் மகன் அழகுராஜாவை அரிவாளால் வெட்டி தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே மகன் அழகு ராஜா உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணையானது பெரியகுளம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.