தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லியோ படம் வெற்றி பெற வேண்டுதல்! பொங்கல் வைத்து பூஜை செய்த ரசிகர்கள்! - leo movie release date

தேனியில் லியோ படம் வெற்றி பெற பொங்கள் வைத்து விசேஷ பூஜைகளை விஜய் மக்கள் இயக்கத்தினர் செய்தனர்.

leo-movie-special-pooja-vijay-makkal-iyakkam
லியோ படம் வெற்றி பெற வேண்டி போஸ்டர்களுடன் பொங்கல் வைத்து வழிபட்ட விஜய் ரசிகர்கள்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 16, 2023, 2:32 PM IST

லியோ படம் வெற்றி பெற வேண்டி போஸ்டர்களுடன் பொங்கல் வைத்து வழிபட்ட விஜய் ரசிகர்கள்

தேனி:இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம், லியோ. மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு விஜய்யுடன் இணையும் இரண்டாவது படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இப்படத்தின் மீது ஏற்பட்டுள்ளது. இப்படத்தில் த்ரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், அர்ஜுன், கௌதம் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார்.

அக்டோபர் 19ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் முன்பதிவில் இதுவரை இல்லாத வகையில் லியோ படம் சாதனை படைத்து வருகிறது. தமிழகத்தில் 19ஆம் தேதி காலை 9 மணி முதல் காட்சி தொடங்கவுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் படத்திற்கான முன்பதிவு டிக்கெட் பெரும்பாலும் விற்று தீர்ந்த நிலையில் படத்தின் எதிர்பார்ப்பு இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது. இந்நிலையில் லியோ படம் வெற்றி பெற வேண்டி விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பாக பொங்கல் வைத்து சிறப்பு பூஜை செய்தனர்.

சிறப்பு பூஜை:தேனி மாவட்டம் தமிழக கேரளா எல்லையில் கூடலூர் அருகே அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மங்களநாயகி கண்ணகி தேவி கோயிலில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மாவட்டத் தலைவர் லெப்ட் பாண்டி தலைமையில் லியோ திரைப்படம் எந்தவிதமான தங்குதடையின்றி சிறப்பாக மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து திரைகளிலும் வெளியிடபடுவதற்காகவும், பொதுமக்கள் தரப்பில் படம் நல்ல வரவேற்பு பெற வேண்டும் என்று போஸ்டர்களுடன் பொங்கல் வைத்து கண்ணகி தேவிக்கு சிறப்பு பூஜைகளை நடத்தினர்.

இதையும் படிங்க:இந்தியா - பாகிஸ்தான் லீக் ஆட்டத்தில் 'ஜெய் ஸ்ரீ ராம்' விவகாரம்...! தமிழர்கள் கையாண்ட விதம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details