தேனி மாவட்டம் போடி திருவள்ளுவர் சிலை அருகே உள்ள எத்திராஜ் தெருவைச் சேர்ந்தவர் சலவைத் தொழிலாளி மாரிமுத்து (55). இவர் தனது வீட்டருகே உள்ள நகராட்சி குடிநீர் குழாயில் இன்று தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தபோது நிலைதடுமாறி கீழே விழப்போனவர், அருகேயிருந்த எர்த் வயரை பிடித்துள்ளார்.
அப்போது மின்சாரம் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.