தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மூணாறில் மீண்டும் நிலச்சரிவு: போக்குவரத்து துண்டிப்பு - மூணாறில் நிலச்சரிவு இருவர் மாயம்

கேரள மாநிலம் மூணாறு அருகே கேப்ரோட்டில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டு, ராட்சத பாறை விழுந்ததில் சுமார் 100 மீட்டர் சாலை அடித்துச் செல்லபட்டது.

munnar

By

Published : Oct 11, 2019, 11:24 PM IST

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறுக்கு அருகே உள்ள கேப் ரோட்டில் 8ஆம் தேதி மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலை விரிவாக்கப் பணிக்காக அங்கு பாறைகள் உடைத்துக் கொண்டிருந்த நான்கு பேரில், இருவர் பலத்தகாயங்களுடன் உயிர் தப்பினர். இதில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த உதயன், கிருஷ்ணகிரி மாவட்டம் குன்னத்தூரை சேர்ந்த கலையரசன் ஆகிய இரண்டு பேரையும் காணவில்லை. இடிபாடுகளில் சிக்கியிருந்த உதயனின் உடலை நேற்று முன்தினம் மீட்புக் குழுவினர் மீட்டனர்.

மூணாறில் மீண்டும் நிலச்சரிவு

மலைமீது இருந்து ஏற்பட்ட நிலச்சரிவில் பாறை, மண், மரங்கள் ஆகியவை அடித்து வந்ததால் சுமார் ஒரு கி.மீ. தூரம் வரை பாறைகள் பரவி கிடக்கின்றன. அதனுள் கலையரசன் சிக்கியிருக்கலாம் என்ற கோணத்திலும் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று காலை கேப்ரோட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியின் அருகில் மலையின் ஒரு பகுதி பெயர்ந்து வந்து சாலையின் பெரும்பகுதியை அடித்துச் சென்றது. இதில் சாலை சுமார் 100 மீட்டர் தூரம் வரை சேதமடைந்தது. இதனையடுத்து அப்பகுதியில் மண்சரிவுகள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் பதற்றம் நிலவுகிறது. மலை அடிவாரத்தில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தேவிகுளம் வட்டாட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: மூணாறில் நிலச்சரிவு: ஒருவர் மரணம், மற்றொருவர் மாயம்!

ABOUT THE AUTHOR

...view details