தேனி மாவட்டம் கோடாங்கிபட்டி அருகிலுள்ள துரைராஜாபுரத்தைச் சேர்ந்தவர்கள் பழனிசாமி - ராமுத்தாய் தம்பதியினர். இவர்களுக்கு 5 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். ஆதி திராவிடர் இனத்தைச் சேர்ந்த பழனிசாமிக்கு நிலம் இல்லாத ஏழை மக்களுக்கு நிலம் வழங்கும் திட்டத்தின் மூலம், தமிழ்நாடு அரசு சார்பாக 1977ஆம் ஆண்டு பூதிப்புரம் பகுதி மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் மூன்று ஏக்கர் விவசாய நிலம் வழங்கப்பட்டது.
கூலி வேலை செய்து வந்த பழனிசாமி 2010ஆம் ஆண்டு வயது முதிர்ச்சி காரணமாக மரணமடைந்தார். தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து அவரது பெயரில் உள்ள நிலத்தைப் பட்டா பெயர் மாற்றுதல் தொடர்பான வில்லங்க சான்றிதழ் வாங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட போதுதான் பழனிசாமி குடும்பத்தாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
ஜெயம் மருத்துவமனை செய்த காரியம்... இருமலுக்கு ஊசி போட்ட மருத்துவர்! எப்படி நிகழ்ந்தது மரணம்?
பழனிசாமிக்குச் சொந்தமான இடம் தேனி ஓடைத் தெருவைச் சேர்ந்த நிலத் தரகர் மலைச்சாமி என்பவர் பெயரிலிருந்தது. அதனைத் தொடர்ந்து பழனிசாமி குடும்பத்தினர் பத்திரப்பதிவு செய்யப்பட்ட பத்திரங்களைப் பார்த்த போது மேலும் அதிர்ச்சியடைந்தனர்.
2010ஆம் ஆண்டு இறந்து போன பழனிசாமி, 2017ஆம் ஆண்டு மலைச்சாமிக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாக ஆவணங்கள் இருந்துள்ளன.
மேலும் பதிவு செய்யப்பட்ட பாத்திரத்தில் பழனிசாமியின் வாக்காளர் அடையாள அட்டை இடம்பெற்றிருந்தது. ஆனால் பழனிசாமி புகைப்படத்திற்கு மாற்றாக வேறு ஒருவர் புகைப்படத்தை வைத்து போலியான வாக்காளர் அடையாள அட்டையை தயாரித்து அதைப் பத்திரப் பதிவு செய்தது தெரியவந்துள்ளது.
கற்பழித்த பெண்ணை வீட்டில் விடுவதில் தகராறு - இளைஞர் அடித்துக்கொலை