பெரியகுளம் சட்டப்பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளர் கதிர்காமு மீது 36 வயது பெண் ஒருவர் கடந்த 8ஆம் தேதி, தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், ’கடந்த 2015ஆம் ஆண்டு மருத்துவ சிகிச்சைக்காக கதிர்காமுவின் மருத்துவமனைக்குச் சென்றபோது பாலியல் ரீதியாகத் தன்னை தொந்தரவு செய்து வீடியோ எடுத்து மிரட்டினார். மேலும், இதுபோன்று மிரட்டி, பலமுறை தன்னை வற்புறுத்தி உடலுறவு வைத்துக்கொண்டார்.
கதிர்காமு மீது புகார் தெரிவித்த பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனை! - அமமுக
தேனி: அமமுக வேட்பாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த பெண் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து இன்று வெளியான தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து கடந்த 2017ஆம் ஆண்டு தனது புகைப்படங்களைக் கேட்டு தேனி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் சென்றபோது, தங்கதமிழ்செல்வன் உன் மீது ஆசைப்படுகிறார் அவரது விருப்பத்திற்கேற்ப நடந்து கொள், இல்லாவிட்டால் குடும்பத்தோடு உன்னைக் கொன்று விடுவேன் என்று கதிர்காமு மிரட்டி உள்ளார்’ என புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார் கதிர்காமு. அதன்பின்னர் கடந்த வெள்ளியன்று அவருக்கு மதுரை கிளை முன்ஜாமீன் வழங்கியது. வேட்பாளர் மீது பாலியல் ரீதியாகக் குற்றச்சாட்டு தெரிவித்த சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், புகார் தெரிவித்த பெண்ணை நேற்று மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து இன்று வெளியான தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.